Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியில் பாதியில் படிப்பை நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்!? – காரணம் இதுதானா?

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (11:12 IST)
சமீபத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் பழைய வீடியோ ஒன்று வைரலாக தொடங்கியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவி ஒருவரிடம் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜகோபாலனை கைது செய்துள்ள போலீஸார் அவர் மீது வழக்குகள் பதிவு செய்து 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பழைய நேர்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் “பள்ளிக்கூடத்தில் கல்வி கட்டணம் கட்டவில்லை என்பதால் என் தந்தையை அவமதித்தார்கள். பீஸ் கட்ட முடியவில்லை என்றால் கோடம்பாக்கம் தெருக்களுக்கு உங்கள் பையனை அழைத்து சென்று பிச்சை எடுங்கள் என நிர்வாகம் சொன்னது” என பேசியுள்ளார்.

அவர் நேரடியாக அதில் பள்ளியின் பெயரை சொல்லாவிட்டாலும் கூட, ஏ.ஆர்.ரஹ்மான் பத்ம சேஷாத்ரி பள்ளியில் படித்து பாதியிலேயே படிப்பை நிறுத்தியவர் என்பதன் மூலம் அவர் அந்த பள்ளியையே குறிப்பிட்டுள்ளார் என இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்