Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

Prasanth Karthick
வெள்ளி, 28 மார்ச் 2025 (18:34 IST)
ஏப்ரல் மாதாந்த ராசிபலன் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் 12 ராசிகளுக்கும்..!

கிரகநிலை:
தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  புதன் , சனி - தைரிய வீரிய  ஸ்தானத்தில்  ராகு, சுக்ரன்(வ), சூரியன் - சுக ஸ்தானத்தில்  சந்திரன் -  பஞசம  ஸ்தானத்தில்  குரு - ரண ருண ரோக  ஸ்தானத்தில்  செவ்வாய் -  பாக்கிய ஸ்தானத்தில்  கேது என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
07-04-2025 அன்று செவ்வாய் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில்  இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
10-04-2025 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப  ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
14-04-2025 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து தன வாக்கு குடும்ப  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று  கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து அஷ்டம  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-04-2025 அன்று புதன் பகவான் தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
இந்த் மாதம் கேந்திரங்கள் பலமாக இருக்கிறது. ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். தடைபட்டிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.

கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பெண்களுக்கு கடன் விஷயங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்துறையினருக்கு அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம்.

உத்திராடம் - 2, 3, 4:
இந்த மாதம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும்.

திருவோணம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

அவிட்டம் - 1, 2:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள். மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9, 10
அதிர்ஷ்ட தினங்கள்:  2, 3, 29, 30

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

திமுகவால் செட் செய்யப்பட்டவர் தான் அண்ணாமலை: ஆதவ் அர்ஜூனா

அடுத்த கட்டுரையில்
Show comments