Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு விரல்களை இழந்துவிட்டேன் : 7 பேரையும் விடுவிக்கக் கூடாது : ஆளுநரை சந்தித்த அனுஷ்யா

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2018 (17:57 IST)
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுவிக்கக் கூடாது என குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட அனுஷ்யா ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

 
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 வருடங்களுக்கும் மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
இதன்படி சமீபத்தில் கூடிய தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என தமிழகமே எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது.
 
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சமீபத்தில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து, தனது மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தாள்.
 
இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை குண்டு வெடிப்பில் பலியானது போது, காயங்களுடன் உயிர் தப்பிய பெண் காவல் அதிகாரி அனுஷ்யா ஏர்னஸ்ட் இந்த 7 பேரில் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில், இன்று அவர் ஆளுநர் பன்வாரிலாலை நேரில் சந்தித்து, பேரறிவாளன் உட்பட அனைவரையும் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி கடிதம் கொடுத்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘குண்டு வெடிப்பில் என் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இரு விரல்களை இழந்துள்ளேன். என் கால்களில் ஏற்படும் வலியால் தினமும் நான் அவதிப்படுகிறேன். எனவே, 7 பேரையும் விடுவிக்கக் கூடாது. அவர்களை தூக்கில் போடு வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments