Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டுக்கான எதிர்ப்பு அனைவருக்கும் ஒரு பாடம்: வீரேந்திர சேவாக்

Webdunia
புதன், 18 ஜனவரி 2017 (13:09 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. சினிமா பிரபலங்களும் மக்களின்  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் பங்கேற்றும் வருகிறார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் தமிழக மக்களின் அமைதிப்போராட்டத்தை கண்டு வியப்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கருத்து  தெரிவித்துள்ளார்.

 
தமிழகத்தில் நடந்துவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் குறித்து மிகவும் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார். அதில்,  “பார்க்கவே அற்புதமாக இருக்கிறது. அமைதியான வழியில் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்தை கண்டு வியக்கின்றேன். இதே போல் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் தொடர்ந்து போராட கேட்டுக்கொள்கிறேன். உங்களின் அமைதி  வழிப்போராட்டம் அனைவருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
தமிழகம் அல்லாது பிற மாநிலத்தைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது இதுவே  முதல் முறை. அதுவும் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர் முகமது கைப், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கான் மகன்கள் பாகிஸ்தானில் நுழைய தடையா? 2 வார்த்தைகளால் ஏற்பட்ட சிக்கல்..!

2011 தேர்தலை போல் 2026 தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் திமுக இழக்கும். அதிமுக சரவணன்..!

விஜய்க்கு தனி விமானம் வாங்கி கொடுத்ததே பாஜக தான்.. சபாநாயகர் அப்பாவு

இப்பவாச்சும் பேசினாரே.. ரஜினிகிட்ட போன்ல பேசி தேங்க்ஸ் சொன்னேன்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொலை மிரட்டலா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments