ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த புதிய அறிவிப்பு

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (11:47 IST)
தமிழகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள சுமார் 2 கோடி குடும்ப அட்டைகளின் ஆயுட்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடிகிறது.


 


இந்நிலையில், அடுத்த ஆண்டு (2017) முதல் புதிய ரே‌ஷன்கார்டு ‘ஸ்மார்ட்கார்டு’ வடிவில் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
அதன் அடிப்படையில் ரே‌ஷன் கடைகளில் ஆதார் எண் பதிவு செய்யும் பணி  நடைபெற்று வருகிறது. இதுவரை 87 சதவீதம் இந்த பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 
 
இதனிடையே, ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க நவ.1 தான் கடைசி நாள் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஆதார் எண்ணை சேர்க்காவிட்டால் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது எனவும் கூறப்பட்டது. 
 
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து முறையான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை இணைக்க எவ்வித காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், ஸ்மார்ட் கார்ட் பெற ரேஷன் கார்டுகளில் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் எனவும் தமிழக உணவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் கூட நிரூபிச்சிட்டாரு!.. விஜய் ஒன்னுமில்ல!.. இராம சீனிவாசன் நக்கல்!.

ஜெர்மனி சென்றுவிட்ட ராகுல் காந்தி.. ஒற்றை ஆளாக பாராளுமன்றத்தை கலக்கி வரும் பிரியங்கா காந்தி..!

முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? நாடு முழுவதும் ஆய்வு நடத்த மத்திய அரசு உத்தரவு..!

ஹிஜாப் விவகாரம்.. நிதிஷ்குமார் மீது போலீசில் புகார்.. முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.11,000 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments