அண்ணாமலை பல்கலை. தேர்வு முடிவில் குளறுபடியா? மாணவர்கள் திடீர் போராட்டம்

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (14:46 IST)
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவில் கோளாறு ஏற்பட்டதாக கூறி மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இதுகுறித்து இந்திய மாணவர் சங்க செயலாளர் அவினேஷ் என்பவர் கூறியபோது, ‘ சிதம்பரம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வை எழுதிய மாணவர்களில் சிலர், தேர்வு எழுதவில்லை என தேர்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு குறைந்தபட்ச அளித்து அரியர் என்று வந்துள்ளதாகவும் கூறினார்..
 
மேலும் நன்றாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு குறைவாக மதிப்பெண் போட்டு, தோல்வி என குறிப்பிட்டு உள்ளதாகவும், கூறியுள்ளார். எனவே தேர்வு முடிவில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்.. நிலவு ஒருநாள் அமாவாசையாகும் என விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments