Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது… அண்ணாமலை பேச்சு!

Webdunia
சனி, 2 அக்டோபர் 2021 (09:39 IST)
இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

கடந்த சில மாதங்களாகவே இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது பொதுமக்களின் தலையில் பெரும் பாரமாக இருக்கிறது. இது ஆளும் பாஜக அரசின் மீது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாகதான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கும் போது ‘பொதுமக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை ‘பெட்ரோல் விலையை 35 ரூபாய்க்கு குறைக்க கூட தயாராக இருப்பதாக பேசினார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பியதால் பாதியிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்றுவிட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments