பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை ஆவேசம்..!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (11:39 IST)
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்திய நிலையில்  பாரத அன்னையின் சிலை வைக்க கூட ஒரு கட்சிக்கு உரிமை இல்லையா என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
விருதுநகர் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில்  நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது. 
 
ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை. 
 
பாரத அன்னையின் புகழ் ஓங்குக!
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டது அநீதி! - அன்புமணி கண்டனம்!

'உதயநிதிக்கு என்ன உழைப்பு இருக்கிறது? 'பால்டாயில் பாய்' நம்மை பேசுகிறார். என்ன செய்வது? ஈபிஎஸ் கிண்டல்..!

ஆப்கன் அமைச்சர் முத்தாகியின் தாஜ்மஹால் வருகை திடீர் ரத்து! என்ன காரணம்?

விஜய் கரூர் செல்லும் தேதி அறிவிப்பு.. என்னென்ன நிபந்தனைகள் விதித்தது காவல்துறை..!

3 பாகிஸ்தான் ராணுவ சாவடிகளை கைப்பற்றிய ஆப்கன்.. 12 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments