Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக - அதிமுக இடையேதான் போட்டி என்பதும் நல்ல விஷயம்தான்: அண்ணாமலை

Mahendran
சனி, 30 மார்ச் 2024 (13:26 IST)
திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே தான் போட்டி என்றும் பாஜக போட்டியிலேயே இல்லை என்று அரசியல் கட்சிகள் கூறுவது ஒரு வகையில் நல்லது தான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘அதிமுக திமுக இடையே தான் போட்டி என்று கூறுவது நல்ல விஷயம் தான். இந்த தேர்தலை உள்ளாட்சி தேர்தல் என்றும் சட்டப் தேர்தல் என்றும் இரு கட்சிகளும் நினைத்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன

இது தேசிய தேர்தல் என்பது மறந்து விட்டார்கள். இன்னும் 1960களில் அவர்கள் இருக்கிறார்கள், தெற்கு வடக்கு ஏற்றத்தாழ்வு, இந்தி, சமஸ்கிருதம் என்று தான் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால் மோடிஜி தமிழ் மக்களுக்கு ஆதரவானார் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு உரியவர் அவர்தான் என்பது மக்களுக்கு தெரியும், நாங்கள் வளர்ச்சி என்ற நேர்மறை மொழியை பற்றி பேசுகிறோம், நம்பிக்கையோடு இருக்கிறோ,ம் மக்கள் அதை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்

மேலும் இந்தியா கூட்டணிக்கு ஒற்றுமை என்பதே இல்லை என்றும் கேரளாவில் காங்கிரஸ் கம்யூனிஸ்ட், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் மோதிக் கொள்கிறார்கள் என்றும் ஆனால் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments