Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற துளசிமதிக்கு அண்ணாமலை பாராட்டு!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (21:00 IST)
சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன்  தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''சீனாவில் நடைபெற்று வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பாட்மிண்டன் போட்டி ஒற்றையர் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீராங்கனை சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். அவருக்கு,  பாஜக  சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
கால்நடை மருத்துவம் பயின்று கொண்டிருக்கும் சகோதரி துளசிமதி முருகேசன் அவர்கள் இந்த ஆண்டு ஆசியப் போட்டிகளில் பெற்றுள்ள இரண்டாவது பதக்கம் ஆகும். உலக அரங்கில் தொடர்ந்து பல சாதனைகள் படைத்து, நம் அனைவரையும் பெருமைப்படுத்த வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments