சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான்: அண்ணாமலை பேட்டி..!

Siva
செவ்வாய், 23 செப்டம்பர் 2025 (10:34 IST)
முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால், அந்த சந்திப்பை பற்றி அரசியல் ரீதியாக பேச வேண்டாம் என அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அண்ணாமலை சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "ரஜினிகாந்த் என் குருநாதர். அவரை பலமுறை சந்தித்து யோகா போன்ற ஆன்மிக விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறேன். சமீபத்தில் கூட அவரை சந்தித்தது உண்மைதான். ஆனால் அதில் அரசியல் எதுவும் பேசவில்லை. எனவே அதை அரசியலுடன் தொடர்புபடுத்திப் பேச வேண்டாம்" என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
அண்ணாமலை தனது கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் ஒரு புதிய கட்சியை தொடங்கலாம் என்றும், ரஜினிகாந்த் அவருக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.
 
அதேபோல், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடனான சந்திப்பு குறித்து அண்ணாமலை பேசுகையில், "அவரைப் பாஜக கூட்டணியில் சேருமாறும், அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.  
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம்: சவரன் ரூ.91,400-ஐ தாண்டியது!

அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது: தவெக நிர்வாகி அதிரடி அறிவிப்பு..!

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments