Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர் மரணத்திற்கு திமுகதான் பொறுப்பு! – பாஜக அண்ணாமலை கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (12:11 IST)
நீட் தேர்வு அச்சம் காரணமாக மேட்டூர் அருகே மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்திற்கு திமுகதான் பொறுப்பு என பாஜக அண்ணாமலை பேசியுள்ளார்.

இன்று நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “ஆண்டுக்காண்டு தமிழக ஏழை மாணவர்கள் அதிகம் தேர்வு பெறும் உச்சநீதிமன்றம் பாராட்டும் NEET தேர்வு. மாணவர்களை அச்சுறுத்தும் பொய்யுரைகளை அறிவாலயம் நிறுத்தட்டும். அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி மாணவர்களின் உயிரை பலிவாங்கும் திமுக அரசு சேலம் மாணவர் தனுஷ் மரணத்திற்கு முழுப்பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments