Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!

Siva
புதன், 22 ஜனவரி 2025 (07:50 IST)
சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஞானசேகருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் திமுக அனுதாபி என கூறப்பட்ட ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நீதிமன்றம் நியமித்துள்ள நிலையில், அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரணை செய்ய, புலனாய்வு குழு தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஏழு நாட்கள் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஞானசேகரனை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகும் இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ராணுவ மேஜர் சுட்டுக்கொலை.. நாடு முழுவதும் பதட்டம்..!

ChatGPT, DeepSeek போல இந்தியாவுக்கு தனி AI Model ரெடி! - மத்திய அமைச்சர் கொடுத்த அடடே அப்டேட்!

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: திடீரென விலகிய சைபர் கிரைம் டி.எஸ்.பி..!

அடுத்த கட்டுரையில்