Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை.. 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பு..!

Webdunia
ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2023 (08:03 IST)
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று உடல் நல குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தர்மபுரி சென்று கொண்டிருந்தபோது திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். 
 
அதனை அடுத்து அவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இருப்பினும் 24 மணி நேரமும் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!

4வது நாளாக தொடர் சரிவில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்..!

சீனாவை ஓரம்கட்டிய இந்தியா! அமெரிக்காவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் அதிரடி!

10 நாட்களாக பெரிய அளவில் ஏற்ற இறக்கமில்லாத தங்கம் விலை.. இனிமேல் என்ன ஆகும்?

சாலை போடவில்லை என கூறிய நபரை ‘போடா’ என கூறிய திமுக எம்.எல்.ஏ.. பெரும் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments