Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலி சான்றிதழ் கொடுத்து 24 ஆண்டுகளாக பணிபுரிந்த டீச்சர்.. ஆண்டிப்பட்டியில் பரபரப்பு..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (11:02 IST)
ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் 24 ஆண்டுகளாக போலிச் சான்றிதழ் கொடுத்து பெண் ஒருவர் டீச்சர் ஆக பணிபுரிந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகே கண்டமனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரா நகர் என்ற ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் விஜயபானு என்பவர் கடந்த 1999 ஆம் ஆண்டு  ஆசிரியராக வேலையில் சேர்ந்தார்.

அவர் பணிக்கு சேர்ந்த 24 ஆண்டுகள் ஆகிய நிலையில் அவரது சான்றிதழ்கள் போலி என தொடக்க கல்வி அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது சான்றிதழ் சரி பார்த்த போது அது போலி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து தொடக்க கல்வி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 24 ஆண்டுகள் பணி செய்த ஆசிரியர் விஜயபானு என்பவரை விசாரணை செய்து வருகின்றனர்.

24 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்து அரசு சம்பளம் பெற்று டீச்சர் வேலை பார்த்த அந்த பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. காரணம் என்ன?

பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?

காடற்ற அனாதை சிங்கம்.. காட்டுக்கே ராஜாவான கதை! Mufasa: The Lion King விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments