Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர மாநிலம் செல்லும் 40 பஸ்கள் நிறுத்தம்

Webdunia
புதன், 18 நவம்பர் 2015 (20:18 IST)
ஆந்திர மாநிலத்தில் நேற்றுலிருந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை கோயம்பேடுலிருந்து ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் 40 பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது.


 
 
கனமழை மற்றும் வெள்ளத்தில் நெல்லூர் அருகே பாலம் உடைந்து விட்டதால் கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா நெல்லூர் செல்லும் 20 ஆந்திர மாநில பஸ்கள் செல்லாமல் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயவாடா, ஐதராபாத், விசாகப்பட்டினம் செல்லும் 12 பஸ்களும் இன்று செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
 
சித்தூர் மாநகராட்சி மேயர் அனுராதா சுட்டுக்கொல்லப்பட்டதால் அங்கு 144 தடை உத்தரவு பிறபிக்கப்பட்டு அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இதனால் சித்தூர் செல்லும் 8 பஸ்களும் புறப்படாமல் கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் அங்கிருந்து வரும் பஸ்களும் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழக அரசு பஸ்களும், நெல்லூர், சித்தூர் ஆகிய நகரங்களுக்கு செல்லவில்லை. ஆனால், திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் எந்தவொரு தடையின்றி கோயம்பேட்டில் இருந்து செல்கிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments