Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முழு ஊரடங்கு? அன்புமணி கோரிக்கையை ஏற்பாரா முதல்வர் ஸ்டாலின்?

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (10:51 IST)
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தமிழகத்தில் அதீதமாக உள்ள கொரோனா பரவல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 
அதில், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, நோய் பாதிப்புடன் மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்காமல் நிலைமையை முன்னேற்ற முடியாது. கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை அறிவித்து, அதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தான்.
 
முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்தினால் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மக்களின் உயிர் முக்கியமா? பொருளாதாரம் முக்கியமா? என்று கேட்டால் உயிரிழப்புகளை தடுப்பதற்குத் தான் அதிக முக்கியத்துவம்  அளிக்கப்பட வேண்டும். 3 வாரங்கள் மட்டும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது.
 
முதற்கட்டமாக 2 வாரங்கள், அடுத்து ஒரு வாரம் என மொத்தம் 3 வாரங்களுக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கை  நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அதற்கு முன்வராவிட்டால், தமிழகத்தில்  அத்தகைய முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அறிக்கையில் கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments