Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா விடுதலையாவது பகல் கனவு - அன்புமணி ராமதாஸ்

ஜெயலலிதா விடுதலையாவது பகல் கனவு - அன்புமணி ராமதாஸ்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (19:22 IST)
ஜெயலலிதா விடுதலையாவது பகல் கனவு என்று பாமக அன்புமணி ராமதாஸ் கூறினார்.
 
நாகர்கோவிலில், பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி எம்.பி. நிருபர்களி டம் கூறியதாவது:  தமிழகத்தில் மது விற்பனைக்கும், ஊழலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இளம் விதவைகள் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். இதற்கு கார ணம் மது. தமிழகத்தில், 2 லட்சம் பேர் மதுவால் இறக்கின்றனர். சட்டசபையில், மது விற்பனை வருவாயை ரூ.29 ஆயிரம் கோடியாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது. மணல் கொள்ளையை தடுத்தாலே அரசுக்கு தேவையான நிதி கிடைக்கும். 
 
தாதுமணல் மூலம் லட்சம் கோடி ரூபாய் தனியாருக்கு செல்கிறது. தமிழகத்தில் பால் வளம் உள்பட அனைத்து துறைகளிலும் ஊழல் மிகுந்துவிட்டது. 18 துறை ஊழல்கள் பற்றி 2010 பக்க புகாரை ஆளுநரிடம் அளித்தோம். இதுவரை நடவடிக்கை இ ல்லை. தமிழக மக்கள் மாற்றுசக்தியை எதிர்பார்க்கின்றனர். தவறு செய்த ஜெயலலிதா தண்டனை அனுபவிப்பதற்கு பதில் தமிழக மக்கள் தண்டனையை அனுபவிக் கின்றனர். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் ஜெயலலிதாவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர் விடுதலை ஆவது பகல் கனவு. மக்களுக்காக பணியாற்ற  வேண்டிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாகம், நடைபயணம் என உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஜி.கே.மணி உடனிருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil