Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரை கூட்டணிக்கு அழைக்கிறார் அன்புமணி? – குழப்பத்தில் பாமக…

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (09:06 IST)
திமுக வோடு கூட்டணியா இல்லை அதிமுக வோடுக் கூட்டணியா என்று இதுவரை அறிவிக்காத பாமக இப்போது திமுக, அதிமுக தவிர யார் வேண்டுமானாலும் பாமக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களுக்குள்ளாகவே உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணையவுள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

எதிர்ப்புறமான அதிமுக கூட்டணியில் பாஜக இணைவது உறுதியாகியுள்ள நிலையில் வேறு எந்தக் கட்சிகளும் ஆர்வம் காட்டாத சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அந்தக் கூட்டணியில் தேமுதிக வையும் பாமக வையும் இணைக்க பாஜக தீவிரமாக வேலை செய்து வருகிறது. கூட்டணி குறித்து அதிமுக முக்கிய நிர்வாகிகள் பாமகவின் ராமதாஸோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் பாமக வின் இளைஞரணி செயலாளரான அன்புமணி ராமதாஸ் திமுகக் கூட்டணிக்கு செல்லவே விருப்பம் காட்டுகிறாராம். இதற்காக திமுகவின் முக்கியத் தலைவரள் மூலம் தூதூவிட்டுட்டிருக்கிறார். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால் திமுக தலைவர் ஸ்டாலின் பாமக வைக் கூட்டணியில் சேர்ப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகத் தெரிகிறது. இதனால் அப்செட் மோடில் இருக்கிறார் அன்புமணி.

பாமக தலைவர் ராமதாஸோ அதிமுக கூட்டணிக்குச் செல்லலாம். அங்கு சென்றால் அதிகமான சீட் பெறமுடியும். மேலும் தேர்தல் நிதியும் அதிகமாகப் பெறலாம் என நினைக்கிறாராம். இதனால் கூட்டணி அமைப்பது யாருடன் என்பதில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அன்புமணியோ இம்முறை ஆட்சியமைக்கப்போவது காங்கிரஸ்தான் என உறுதியாக நம்புகிறாராம். அதனால் எப்படியாவது திமுக கூட்டணியில் இணைந்துவிட வேண்டும் என ஆர்வம் காட்டுகிறார். ஆனால் திமுக தரப்பிடம் இருந்து அதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

இதனால் மனமுடைந்த அன்புமணி இந்நிலையில் இப்போது இரண்டுக் கட்சிகளோடும் கூட்டணி அமைக்காமல் டிடிவி தினகரனின் அமமுக வோடு கூட்டணி அமைத்து மூன்றாவது அணியை உருவக்கலாம் என்ற திட்டத்திலும் உள்ளதாகத் தெரிகிறது. அதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி திமுக, அதிமுக தவிர்த்த மற்ற கட்சிகள் பாமக தலைமையிலானக் கூட்டணிக்கு அவரலாம்  என அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் அன்புமணி அழைப்புக்கு எந்தக் கட்சிகளும் செவிசாய்க்கப் போவதில்லை என்பதுதான் நிதர்சனம். ஏனென்றால் எல்லாக் கட்சிகளும் திமுக அல்லது அதிமுக அணியில் இணைந்து தங்களுக்கான சீட் விவரங்களுக்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதனால் அன்புமணியின் இந்த மூன்றாவது அணி திட்டம் எட்டாக்கனியாகவே இருக்கப்போகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

திருப்பதி லட்டு விவகாரம்.. 5 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைப்பு..!

கோவில் அருகே கூடினால் கைது: இந்துக்களுக்கு கனடா போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த அமெரிக்க அதிபர் யார்? வாக்குப்பதிவு தொடக்கம்.. நாளை காலை முன்னிலை விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments