நவம்பர் மாதம் கண்டிப்பாக பள்ளிகள் திறப்பு! – அன்பில் மகேஷ் உறுதி!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:21 IST)
தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் 1 வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்த கட்டமாக நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசின் முடிவில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “கொரோனா மூன்றாம் அலை குறித்து உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதனால் நவம்பர் 1ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments