நீட் தேர்வு அறிவிப்பால் வருத்தத்தில் ஸ்டாலின் - அன்பில் மகேஷ் தகவல்!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (08:45 IST)
எதிர்பாராத விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிவித்து இருப்பது வருத்தம் அளிப்பதாக  இருக்கிறது என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் முறையாக நடத்தப்படுகிறதா என்றும் ஆய்வு செய்ய இருக்கிறோம். மேலும், நீட் தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்க இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பது எங்கள் கருத்தாக உள்ளது. ஆனால் எதிர்பாராத விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிவித்துள்ளது. இது வருத்தம் அளிப்பதாக  இருக்கிறது என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments