Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது.. கவர்னர் சந்தித்த சில நிமிடங்களில் பரபரப்பு..

Siva
திங்கள், 30 டிசம்பர் 2024 (16:19 IST)
கைது செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களை பார்ப்பதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்ற போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  
 
விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை பொதுமக்களுக்கு விநியோகித்த தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்கள் முன்னதாக கைது செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்களை காணச் சென்ற தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் ஆனந்த், சென்னை தியாகராய நகரில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
 
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை சமூக வலைதளத்தில் இன்று காலை பதிவிட்டிருந்தார். அதை தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் பொதுமக்களுக்கு விநியோகித்தார்கள். முன்னதாக, தனியார் மகளிர் கல்லூரி அருகே விநியோகிக்க கூடாது என்று காவலர்கள் தடுத்த நிலையில், வாக்குவாதமும் ஏற்பட்டிருந்தது.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களை காணச் சென்றபோது, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8,000க்கும் அதிகமான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி.. தடுமாறும் தமிழக கல்வித்துறை..!

பா.ஜ.,வுக்கும், விஜய்க்கும் ஒரே நோக்கம் தான்: இன்னும் நம்பிக்கையுடன் இருக்கும் நயினார் நாகேந்திரன்

சகோதரனுக்கு சகோதரியுடன் திருமணம்! இரட்டை குழந்தை பிறந்தால் இப்படி ஒரு வழக்கமா? - வைரலாகும் வீடியோ!

சமூகநீதியை படுகொலை செய்த நீங்க அந்த வார்த்தைய கூட சொல்லாதீங்க? - மு.க.ஸ்டாலினை விமர்சித்த அன்புமணி!

மாமியாரை அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்.. மருமகளின் அம்மாவும் அடித்த சிசிடிவி காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments