Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் இருப்பு: சுங்கத்துறை விளக்கம்!

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (14:35 IST)
சென்னையில் உள்ள அமோனியம் நைட்ரேட் இருப்பு குறித்து தற்போது  சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
சமீபத்தில் லெபனான் தலைநகர் பெய்ரூட் என்ற நகரில் மிகப்பெரிய அளவில் வெடிவிபத்து ஒன்று நிகழ்ந்து பெரும் சேதங்களை விளைவித்தது.  இந்த வெடி விபத்தால் சுமார் 70 பேர்களுக்கு மேல் மரணமடைந்ததாகவும் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த வெடி விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் டன் கணக்கில் அமோனியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருள் இருப்பு வைத்திருந்ததாகவும் அந்த அமோனியம் நைட்ரேட் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் அதில் தீ பிடித்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தெரிய வந்தது. 
 
இந்த விபத்தை அடுத்து உலகம் முழுவதும் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டிருந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையிலும் அமோனியம் நைட்ரேட் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 740 மெட்ரிக் டன் அளவில் இந்த இருப்பு உள்ளதாகவும் செய்தி வெளியானது. 
 
இது குறித்து தற்போது சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறை வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments