Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதயமானது அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (12:00 IST)
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் டாக்டர்.துரைபெஞ்சமின் என்பவர் தலைமையில் “அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்” என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.



தமிழக முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியிலும், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் மிக பெரிய ஆதங்கமும், அ.இ.அ.தி.மு.க தலைமை மீது மிகப் பெரிய அதிருப்தியும் நிலவி வருகிறது. ஜெ.ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. இன்னும் சொல்ல போனால், தமிழகத்தில் உள்ள கிராமப்புற மக்கள் ஜெயலலிதாவின் மரணத்தை  இன்று வரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதற்கிடையே மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தீபா பெயரில் பல்வேறு அமைப்புகளை கட்டமைத்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகர் டாக்டர்.துரைபெஞ்சமின் என்பவர் தலைமையில் “அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்” என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஜெ மறைவிற்கு பிறகு அவரை முன்னிறுத்தி தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பட்டதாக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டாலும், எந்த அமைப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்படவில்லை.

ஆனால், இந்த “அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்”  அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments