தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன்.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட்..!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (15:50 IST)
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழக பாஜக நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்’ என தமிழில் பதிவு செய்துள்ளார்.
 
இந்த ட்விட்டிற்கு பதில் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது: 
 
என் மண் என் மக்கள் நடைபயணத்தை தொடங்கி வைக்க தமிழகத்தின் ராமேஸ்வரம் வரும் நமது மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களை வரவேற்க தமிழக பாஜக சகோதர சகோதரிகள் மிக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிகார் சட்டப்பேரவை தேர்தல்: மண்ணை கவ்விய பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி..!

திமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு புதிய பொறுப்பு.. துரைமுருகன் அறிவிப்பு..!

வாரத்தின் கடைசி நாளில் திடீரென சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஏறிய வேகத்தில் மீண்டும் இறங்கும் தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?

பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக கூட்டணி.. 13 தொகுதிகளில் மட்டும் காங். முன்னிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments