Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு: அமித்ஷா பேச்சால் அதிமுக அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 11 ஜூன் 2023 (14:46 IST)
மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு வைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதை அடுத்து அதிமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து கூட்டணியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு அதிகபட்சமாக ஐந்து தொகுதிகள் வரை மட்டுமே அதிமுக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்திருப்பதாக அமித்ஷா என்று பேசியிருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னையில் நடைபெற்ற தென் சென்னை தொகுதி பாஜக நிர்வாகி கூட்டத்தில் பேசி அமித்ஷா வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற இலக்கு நிர்ணயிப்போம் என்று கூறியுள்ளார். இதனால் அதிமுக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், பாஜக நெருக்கடிக்கு பணிந்து அதிமுக 25 தொகுதிகளை விட்டுக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments