குத்துமதிப்பாய் மொழிப்பெயர்த்த எச்.ராஜா! மேடையில் கலாய்த்த அமித்ஷா!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (17:43 IST)
விழுப்புரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த அமித்ஷா, எச்.ராஜா மொழிபெயர்த்ததில் தவறை சுட்டிக்காட்டியது வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் பலர் தமிழகம் வருகை தந்து பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அவர் இந்தியில் பேச பேச அதை எச்.ராஜா மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். அப்போது 2ஜி, 3ஜி, 4ஜி என திமுக, காங்கிரஸ் குறித்து அமித்ஷா பேசியதை எ.ராஜா சுருக்கமாக கூறினார், அதற்கு அமித்ஷா அதை விரிவாக தான் சொன்னது போலவே சொல்ல சொன்னார். ஆனால் அப்போதும் எச்.ராஜா திணறியதால் “ராஜா ஜீ சரியா ட்ரான்ஸ்லேட் பண்ண மாட்டேங்குறார்” என சிரித்துக் கொண்டே சொன்ன அமித்ஷா தானே இந்தி, ஆங்கிலம் கலந்து அதை மீண்டும் விளக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments