Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலின் மறு உருவம் தான் அமித்ஷா: ஆர்பி உதயகுமார்

Mahendran
வியாழன், 27 மார்ச் 2025 (10:14 IST)
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பார்க்கப்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
 
கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து 2 மணிநேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தினார்.
 
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்தார். "கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து மட்டுமே பேசினேன்," எனத் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், கட்சிக் கூட்டத்தில் அமித் ஷாவை புகழ்ந்து ஆர்.பி. உதயகுமார் பேசிய காணொலி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியதாவது: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, 2 மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
 
ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளியே வராதீங்க! இன்று முதல் கொளுத்தப் போகும் கடும் வெயில்! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ ரயில்.. விரைவில் இயங்கும் என தகவல்..!

6 மாநில கேஸ் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்! - கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!

ரூ.7.79 கோடி வரி பாக்கியை உடனே செலுத்த வேண்டும்: ஜூஸ் கடைக்காரருக்கு IT நோட்டீஸ்

எடப்பாடியார் டெல்லி விசிட் எதிரொலி! டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments