Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமித் ஷாவுடன் தேமுதிக சுதீஷ் சந்திப்பு

அமித் ஷாவுடன் தேமுதிக சுதீஷ் சந்திப்பு
, வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (13:52 IST)
தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் டெல்லியில் நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. பின்னர்  மத்திய அரசின் நடவடிக்கைகளை மதிமுக பொது செயலாளர் வைகோவும், பாமக நிறுவனர் ராமதாசும் தொடர்ந்து விமர்சித்து வந்தனர். இந்நிலையில்  மதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக வைகோ அறிவித்தார்.
 
அதேபோல, தேமுதிகவும் கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதை இதுவரை உறுதி செய்யவில்லை. இந்நிலையில், ரயில்வே பட்ஜெட்டை தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதே சமயம், தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் டெல்லியில் நேற்று இரவு அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த திடீர் சந்திப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil