Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்யராஜ் மகளை மிரட்டி சென்ற அமெரிக்கர்கள்...

Webdunia
சனி, 24 ஜூன் 2017 (09:21 IST)
அமெரிக்காவை சேர்ந்த சிலர் சென்னைக்கு வந்து நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை மிரட்டி சம்பம் அரங்கேறியுள்ளது.


 

 
சத்யராஜின் மகள் திவ்யா சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் இவரை அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஆணும், பெண்ணும் சந்தித்து, தங்கள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு பரிந்துரைக்குமாறு கூறியுள்ளனர். அந்த மாத்திரை மல்டி வைட்டமின் மற்றும் கொழுப்புச்சத்தை குறைக்கும் தன்மையுடையது என அவர்கள் கூறியுள்ளனர். 
 
இதையடுத்து, அந்த மாத்திரைகளின் தன்மைகளை திவ்யா ஆய்வு செய்து பார்த்துள்ளார். அப்போது, அந்த மாத்திரைகளில் அதிகப்படியான வைட்டமின் இருந்துள்ளது. எனவே, அந்த மாத்திரை உட்கொண்டால், நோயாளிகளின் கண் பார்வை பாதிப்பு உள்ளிட்ட சில பக்கவிளைவுகள் வரும் என்பதால் அந்த மாத்திரைகளை அவர் நிராகரித்துவிட்டார்.
 
இதையடுத்து, அடுத்த கட்டமாக அவர்கள் லஞ்சம் கொடுக்கவும் முன்வந்தனர். ஆனால், திவ்யா அதை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த அமெரிக்கர்கள் “இந்தியாவில் வசிப்பவர்கள் எப்போது மற்றவர்கள் மீது இவ்வளவு அக்கறையுடன் நடக்க துவங்கினீர்கள்?. இங்கு எங்களுக்கு பல அரசியல்வாதிகளை தெரியும். எங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லை” என ஏகத்துக்கும் அநாகரீகமாக பேசி அவரை மிரட்டி சென்றுள்ளனர்.
 
இதை திவ்யா பத்திரிக்கையாளர்கள் சிலரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாவோயிஸ்டுகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! அதிகாலையில் நடந்த அதிரடி..!

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதே திமுக அரசு தான்: அண்ணாமலை

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. கல்வி அமைச்சர் அறிவிப்பு..!

முதல்வரின் திமிர் பேச்சுக்கு மக்கள் தக்க பாடத்தை நிச்சயம் புகட்டுவார்கள்: ஈபிஎஸ்

லண்டனில் இருந்து சென்னை திரும்பினார் அண்ணாமலை.. முதல் பேட்டியில் விஜய் குறித்த கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments