துணை முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களுக்கு அமெரிக்க விருது அறிவிப்பு!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (22:17 IST)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் பிரிட்டன் அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் சென்று வந்தார். இந்த சுற்றுப்பயணத்தின் போது பல கோடி ரூபாய் முதலீடு குறித்த ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அடுத்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் ஓபிஎஸ் அவர்களுக்கு அமெரிக்க தமிழர்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு American Mult Ethnic Coalition Inc.. இன்டர்நேஷனல் ரைசிங் ஸ்டார் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அமெரிக்கா செல்லும்போது இந்த விருதை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அமைப்பு ஒன்று துணை முதல்வருக்கு விருது அளிக்கவுள்ளதை அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

மகள் செல்போனை பார்த்து கண்டித்த அப்பா.. மகளுடன் சேர்ந்து சொந்த கணவரையே கொலை செய்த மனைவி?

மம்தா பானர்ஜி தொகுதியில் பிரசாந்த் கிஷோர் வாக்காளராக இருக்கிறாரா? தேர்தல் கமிஷன் நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments