Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையை அரசு இயக்கலாமா? – மற்ற கட்சியினரின் கருத்தை கேட்கும் எடப்பாடியார்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:32 IST)
தமிழகத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அரசு கையிலெடுத்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக இன்று முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்ஸிஜன் தயாரிப்பு மையத்தை மட்டும் அவசர நிலை கருதி திறக்க வேதாந்தா நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.

இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்த நிலையில் தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தற்போது உள்ள அவசர நிலையில் ஆக்ஸிஜன் தேவை என்பதால் அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்கலாமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் கூட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments