Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாதித்த அழகிரி; சம்மதித்த ஸ்டாலின்: பிரம்மாண்டத்துக்கு காத்திருக்கும் திமுக!

சாதித்த அழகிரி; சம்மதித்த ஸ்டாலின்: பிரம்மாண்டத்துக்கு காத்திருக்கும் திமுக!

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2016 (09:04 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் கோபாலபுர வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்து வருகிறார். அவரை முன்னாள் மத்திய அமைச்சரும் அவரது மகனுமான அழகிரி பலமுறை அடிக்கடி போய் சந்தித்தார். இது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது.


 
 
இந்த சந்திப்பின் எதிரொலியாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அழகிரி மீண்டும் கட்சியில் இணைவதை பிரம்மாண்ட பொதுக்கூட்டமாக நடத்த இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
 
கடைசியாக அழகிரி கருணாநிதியை பார்க்க வந்தபோது தான் ஸ்டாலினும் அங்கு இருந்தார். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசி நலம் விசாரித்துக்கொண்டனர். இந்த சந்திப்பின் போது அழகிரி மீண்டும் கட்சியில் இணைவதற்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் அழகிரி தரப்பிலும் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளது. அவை, அப்பா இருக்கும் வரை அவர்தான் தலைவர். தனக்கு தென் மண்டல பொறுப்பாளர் பதவி வேண்டும், வேறு எந்த பதவியும் வேண்டாம். தனது ஆதரவாளர்களுக்கும் பொறுப்புகள் வேண்டும். இவை தான் அழகிரி தரப்பில் வைக்கப்பட்ட  முக்கியமான நிபந்தனைகள்.
 
இதற்கு ஸ்டாலினும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அழகிரியின் நிபந்தனைகளுக்கு கருணாநிதி அஞ்சினாலும், ஸ்டாலின் கூலாக தான் இருப்பதாக கூறப்படுகிறது. எந்த பொறுப்புகள் கொடுத்தாலும் தன்னை மீறி எதுவும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஸ்டாலின்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் உடனே புக் செய்யலாம்.. பணம் பின்னர் செலுத்தலாம்..! - IRCTC அறிமுகப்படுத்திய Ticket Now Pay Later வசதி!

இதை பார்க்கும் போது எதிர்க்கட்சியினருக்கு வயிற்று எரிச்சல் வரத்தான் செய்யும்: உதயநிதி

”டேய் சங்ககிரி ராஜ்குமார்.. நீ எந்த ஊருடா?” போனில் மிரட்டும் நாதக தொண்டர்கள்! - சீமான் போட்டோஷாப் விவகாரம்!

வாரத்தின் கடைசி தினத்தில் பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

நான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. போதுமா? செய்தியாளர் சந்திப்பில் சீறிய சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments