Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டுப்படுகிறோம்.. காத்திருக்கிறோம்.. தல! – வைரலாகும் டேஞ்சர் சிட்டி பேனர்!

Webdunia
செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (10:31 IST)
வலிமை அப்டேட் குறித்து நேற்று நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்ட நிலையில் அஜித் ரசிகர்கள் வெளியிட்டுள்ள பேனர் வைரலாகியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்ட நிலையில் எந்த விதமான அப்டேட்டும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு அடிக்கடி படக்குழுவினரை கேட்டு வந்தனர்.

ஆனால் தற்போது சமீப காலமாக பார்க்கும் முக்கிய பிரமுகர்களிடம் கூட வலிமை அப்டேட் கேட்க தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் மைதானத்தில், அரசியல்வாதிகளின் கூட்டத்தில் என வலிமை அப்டேட் கேட்கப்படுவது வைரலாகி வரும் நிலையில் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அப்டேட் வரும் வரை காத்திருக்குமாறும், மற்றவர்களை அப்டேட் கேட்டு தொந்தரவு செய்வது வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து மதுரை அஜித் ரசிகர்கள் பேனர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டேஞ்சர் சிட்டி அஜித் ரசிகர்கள் என பெயர் கொண்ட அவர்கள் அஜித்தின் அறிக்கையை பேனரில் இணைத்து “உங்கள் வார்த்தைக்கு கட்டுப்படுகிறோம். உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments