Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலைய சோதனையை பெரிது படுத்த வேண்டாம் : இளையராஜா

Webdunia
புதன், 8 ஜூன் 2016 (09:12 IST)
பெங்களூரு விமான நிலையத்தில் தன்னிடம் நடத்தப்பட்ட சோதனையை பெரிது படுத்த வேண்டாம் என இசையமைப்பாளர் இளையராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.


 

 
இசைஞானி இளையராஜா தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு சென்னை திரும்புவதற்காக பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்துள்ளனர். அப்போது விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் இளையராஜா உள்ளிட்டோரை சோதனை செய்தனர்.
 
சோதனையில் அவர் கொண்டுவந்த பையில் தேங்காய், விபூதி உள்ளிட்ட பிரசாதப் பொருட்கள் இருந்துள்ளது. அவற்றை சோதனை செய்த அதிகாரிகள், பிரசாதப் பொருட்களை விமானத்தில் கொண்டு செல்வதற்கு விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். 
 
மேலும், விசாரணை என்ற பெயரில் பாதுகாப்பு அறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களை காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கார்த்திக் ராஜா புகைப்படம் எடுத்துள்ளார். கார்த்திக்ராஜா படம் எடுத்ததைப் பார்த்த அதிகாரிகள் அவர்களை மேலும் ஒரு மணிநேரம் காத்திருக்க வைத்திருக்கின்றனர்.
 
கடைசியாக கார்த்திக் ராஜாவின் மொபைலில் இருக்கும் படங்களை அழிக்கச் சொல்லிவிட்டு கிளம்ப அனுமதித்திருக்கின்றனர். முதல் முறையாக பிரசாதப் பொருட்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அவரை பாதுகாப்பு அறையில் 1 மணி நேரம் காக்க வைத்துள்ளனர்.
 
மேலும், பிரசாத பொருட்களை வெடிகுண்டை போல், பாதுகாப்பு அதிகாரி சோதனை செய்த விதம் இளையராஜாவிற்கு கோபத்தையும், மன வருத்தத்தை கொடுத்தாகவும் செய்திகள் வெளியானது. அதன்பின் அதிகாரிகள் தலையிட்டு, இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டதோடு, அவரை பிரசாதத்துடன் விமானத்தில் செல்ல அனுமதித்தனர்.
 
உலகம் முழுதும் கோடிக்கணக்கான ரசிகர்களாலும், இந்திய சினிமா ஜாம்பவான்களாலும், தமிழ் மக்களாலும் கொண்டாடப்படும் இளையராஜா அவர்களை விமான நிலைய அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் காக்க வைத்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இளையராஜா “பொதுவாக எல்லா விமான நிலையங்களிலும் நடத்தப்படும் சோதனைதான் என்னிடம் செய்யப்பட்டது. அதிகாரிகள் அவர்களின் பணியை செய்தார்கள். நானும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தேன். 
 
இதைவிட பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்துள்ளேன். என்னை காக்க வைத்ததால் நான் ஒன்றும் சிறுமை அடையவில்லை. நான் எப்பவும் ராஜாதான். எனவே இந்த விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

மணமகள் வீட்டார் மீது காரை ஏற்றிய மணமகன் உறவினர்.. திருமண வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments