Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோத்தி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்! அடுத்த வாரம் முதல் விமான சேவை.!!

Senthil Velan
சனி, 13 ஜனவரி 2024 (17:11 IST)
சென்னையில் இருந்து அயோத்திக்கு அடுத்த வாரம் முதல் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம்  தெரிவித்துள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
 
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள்,  பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மொத்தம் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் சென்னையில் இருந்து அடுத்த வாரம் முதல் அயோத்திக்கு விமான சேவை தொடங்க இருப்பதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த விமான சேவையை ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் சென்னையில் இருந்து லட்சத்தீவு பகுதிகளுக்கும் விமான சேவை தொடங்கப்படும் என்றும் லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments