Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக உட்கட்சி தேர்தல் : ஓபிஎஸ், ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (16:28 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்தது.
 
இந்த தேர்தலில் கலந்து கொள்ள 5 ஆண்டிற்கும் மேல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்க கூடாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதற்கான வேட்புமனு தாக்கல் 3ம் தேதி தொடங்கி நடந்த நிலையில் இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை  நடைபெற்றது.
 
ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மனு அளித்துள்ள நிலையில் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் இவர்களது வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால் போட்டியின்றி இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக 
அதிமுக தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments