Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் ''- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (15:36 IST)
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிவகித்து வருகிறார்.

இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும்  26 ஆம் தேதி நடைபெறும் என்று அக்கட்சித்தலைமை அறிவித்தது.

அதன்படி, வேட்புமனுதாக்கல்,  கடந்த 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை வேட்புமனுதாக்கல்  நடைபெற்றது.

இந்த வேட்மனுவை மார்ச் 21 ஆம் தேதி பிற்பலம் 3 மணிக்கும் திரும்பப் பெறலாம் என்று கூறி, மார்ச் 26 ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் நிலையில், மார்ச் 27 ஆம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் , எடப்பாடிக்கு ஆதரவாக 200 க்கும் மேற்பட்டோர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பிஎஸ் தரப்பினர்.  ‘பொதுக்குழு மூலம் பொதுச்செயலாளருக்கான அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளார், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டது. ஆனால், விளக்கம் கேட்காமல்  தங்களை கட்சியில் இருந்து நீக்கினர். கட்சியில் இருந்து  நீக்குவதற்கு எங்களுக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பவில்லை. விளக்கம் தர அவகாசமும் அளிக்கவில்லை ‘என்று ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘அதிமுக தேர்தலுக்கான அவகாசம் முடிந்துள்ள நிலையில்,  தேர்தல் நடைமுறை தொடங்கிய பின் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் வழக்கு இன்னும் நிலுவையிலுள்ள போதுதான் தேர்தலை அறிவித்துள்ளனர். அதனால், தாமதமாகவில்லை.

பொதுச்செயலாளார் தேர்தலில்  போட்டியிடுவதற்காக நிபந்தைகளை  நீக்கினால் வழக்கை திரும்ப பெறத் தயார் என்றும், பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று தெரிவித்துள்ளனர்.’

இந்த வழக்கு மீண்டும் நாளையும் விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுவாச குழாயில் தொற்று; தீவிர சிகிச்சையில் போப் பிரான்சிஸ்! - சிறப்பு பிரார்த்தனை செய்யும் மக்கள்!

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments