Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சத்தமின்றி களம் இறங்கப்போகும் நத்தம்

சத்தமின்றி களம் இறங்கப்போகும் நத்தம்

சத்தமின்றி களம் இறங்கப்போகும் நத்தம்
, வெள்ளி, 27 மே 2016 (11:22 IST)
மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் களம் இறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
மதுரை, திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ சீனிவேல்  திடீர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 25 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
 
ஏற்கனவே, தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஐவர் அணி புகழ் வைத்தியலிங்கத்திற்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது.
 
அதேபோன்று, ஐவர் அணியில் மற்றொரு முக்கிய நபரான நத்தம் விஸ்வநாதன், நத்தம் தொகுதியில் இருந்து மாற்றப்பட்டு, ஆத்தூர் தொகுதியில் தேர்தலில் களம் இறக்கப்பட்டார். ஆனால், அவர் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமியிடம் படுதோல்வி அடைந்தார்.
 
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு முதல்வர் ஜெயலலிதா முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், இதனையடுத்தே, அவர் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் களம் இறக்கப்படலாம் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக அமைச்சர்களுக்கு ஜெயலலிதா புதிய உத்தரவு