Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:08 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்பதும் இதனை அடுத்து பெரும்பாலானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்றைய பாதிப்பு 500ஐ நெருங்கிவிட்டதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார் 
 
காய்ச்சல் சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள பூஸ்டர் தடுப்பு ஊசி மட்டுமே ஆயுதம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

ஜெகன் மோகன் மீண்டும் வெற்றி பெறுவார்..! ரூ.30 கோடி பந்தயம் கட்டிய நிர்வாகி மர்மமரணம்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.! தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல்..!!

சீமானை பழிப்பது குறையாது - இனி கழிப்பது இயலாது..! வைரமுத்து ட்விட்..!

வெளியுறவுத் துறையை தக்கவைக்கிறாரா ஜெய்சங்கர்?வெளிநாட்டு தலைவர்களுடன் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர்.. திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments