Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம்.. என்ன காரணம்?

Siva
வெள்ளி, 31 மே 2024 (09:27 IST)
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என கூறப்படும் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

2013ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில், போலீஸ் காவலில் நடந்த மரணம் தொடர்பான விசாரணை முடிவில் இந்த பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அவரை தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.

திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக வெள்ளத்துரை  பணியாற்றி வந்த நிலையில் திடீரென அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் பிரபல தாதாவான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்தவர் இவர் என்றும், மருதுபாண்டியர் குருபூஜையின் போது 2013-ம் ஆண்டு எஸ்.ஐ. ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை வெள்ளத்துரை என்கவுன்டர் செய்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

சாதி மாறி திருமணம்.. மகள் கண்முன்னே மருமகனை சுட்டு கொன்ற தந்தை: அதிர்ச்சி சம்பவம்!

டெலிவரி ஊழியர்கள் E-Scooter வாங்க ரூ.20 ஆயிரம் மானியம்! - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு!

மோடியுடன் பேச போகிறேன்.. இனிமேல் டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை இல்லை: பிரேசில் அதிபர்

அடுத்த கட்டுரையில்
Show comments