Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் வாங்குவாரா?: அதிமுக கிண்டல்!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:15 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை விமர்சித்துள்ளார்.
 
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தற்போது உள்ள மத்திய அரசில் தமிழகத்தை சேர்ந்த ஒரே அமைச்சரும் இவர் தான். இதனால் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வை ஆதரித்த பொன்.ராதாகிருஷ்ணன் அதன் பின்னர் அதற்கு எதிரான கருத்தை கூறி, உயர்த்திய பேருந்து கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன், தமிழகத்தில் பாஜக பின்னடைவை நோக்கி செல்கிறது. ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை. கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவாரா என்பது சந்தேகம் தான் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென மாயமான அமெரிக்க விமானம்.. விமானத்தில் இருந்தவர்கள் கதி என்ன?

அமெரிக்கா செல்ல ரூ.1 கோடி கொடுத்தேன், ஆனால் அமிர்தசரஸ் வந்திறங்கினேன்: பெண்ணின் கண்ணீர் பேட்டி..!

அதிகாரம் உள்ளது.. மசோதாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை: ஆளுனர் தரப்பு வாதம்..!

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து! - அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

25 ஆண்டுகளில் அதிக வெப்பமான ஜனவரி மாதம்.. இந்த ஆண்டு கோடை கொளுத்துமா?

அடுத்த கட்டுரையில்
Show comments