Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ.விற்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

ஜெ.விற்காக தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (12:22 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டதில் வேதனை அடைந்து, கும்பகோணத்தில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 

 
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்களும், விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று அதிமுகவினரும் கூறி வருகின்றனர்.
 
ஒருபுறம், முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி, தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் பிரார்த்தனைகளும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மறுபுறம், முதல்வருக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதால், வேதனை அடைந்து, சில தொண்டர்கள் தீக்குளிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கும்பகோணம் மோதிலால் தெருவைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரின் மகன் மோகன்குமார், கடந்த 13ம் தேதி, தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
 
உடலில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு மரணமடைந்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன இன்னொரு உயிர்.. தூக்கில் தொங்கி இளைஞர் தற்கொலை..!

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி.. பிரான்ஸ் அரசு கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு..!

மீண்டும் 14 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.. இலங்கை கடற்படையின் அத்துமீறல்..!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்துவிட்டார்.. திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்து சித்தர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments