Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா; தம்பித்துரை பெயர் மிஸ்ஸிங் ; எடப்பாடி அணியில் விரிசல்

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2017 (13:22 IST)
ஜெ.வின் மறைவிற்கு பின்பு ஒ.பி.எஸ் அவசர, அவசரமாக முதல்வரானார். பின்னர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், பின்னர் கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ க்கள் ஒன்று சேர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் சசிகலாவின் தயவோடு, ஒரு மனதாக முதல்வராக்கினார்கள். 


 

 
ஆனால் அவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வாரானதிலிருந்து ஒ.பி.எஸ் மற்றும் சசிகலா அணியினர் இரண்டாக பிளவு பட்டு தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் மாறி, மாறி பேட்டி கொடுத்து வந்த நிலையில், தமிழகமே, ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகள் இணைந்தது என்று பெருமூச்சு விட்டது.
 
அந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் போக்கு சரியில்லாத காரணத்தினால் சசிகலாவின் டி.டி.வி தினகரன் அணியினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென்று  தற்போது இ.பி.எஸ் & ஒ.பி.எஸ் அணியா ? அல்லது டி.டி.வி தினகரன் அணியா? என்று போட்டி போட்டு, ஆங்காங்கே பொதுக்கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்தப்பட்டு வருகிறது.
 
ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகளை சார்ந்த தமிழக அரசு, ஆங்காங்கே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி வரும் நிலையில், கரூரில் வருகிற 4 ம் தேதி திருமாநிலையூர் பேருந்து பணிமனை பின்புறம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதற்கான முழு மூச்சில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆதரவாளர்கள், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் என்றும், ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் என்று ஆங்காங்கே தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், ஒ.பி.எஸ் ஆதரவாளர்களை இந்நிகழ்ச்சிக்கு புறந்தள்ளி, பல்வேறு பணிகளில் அவர்களை உள்ளே நுழைய விடாமல் அவர்களாகவே அதாவது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களே, செய்து வந்ததாக கூறப்படுகின்றது. 
 
இந்நிலையில் முன்னணி என்று கூறப்படும் தனியார் செய்தி சேனலில்  ‘அழைக்கின்றார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்’ என்ற விளம்பரமும், அமைச்சராகவும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போதே மாவட்ட செயலாளராக பரிந்துரை செய்ய முழு முதற்காரணமான மக்களவை துணை சபாநாயகரின் புகைப்படம் மட்டுமே அந்த விளம்பரத்தில் உள்ளதாகவும், மேலும் எந்த விளம்பரமாக இருந்தாலும் சரி, நான் (எம்.ஆர்.விஜயபாஸ்கர்), எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆகியோர் சேர்ந்தே பப்ளிஸ் பண்ணுவதாகவும், விளம்பரம் வெளியிடுவதாகவும், கூறி, தற்போது அந்த தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் வருவதையொட்டி, எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். 


 

 
மேலும், இது மட்டுமில்லாமல் கரூர் கோவை சாலையில், மின்னொளி பிளக்ஸ்களை வைத்துள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவருடைய படமும் பெயரும் வைத்து, அதற்கு ஒளியூட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரையின் புகைப்படமும், அவருடைய பெயரும் இல்லாத நிலையில், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணனின் பெயரும் இல்லாத நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தரப்பினரும், எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் தரப்பினரும் கடும் சொனக்கம் காட்டி வருகின்றனர். 
 
மேலும் ஏற்கனவே ஒ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணியினர் இணைந்த நிலையில், கரூரில் நடைபெற உள்ள நூற்றாண்டு விழாவில் ஒ.பி.எஸ் அணியினரை புறக்கணிக்கும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயலால், ஒ.பி.எஸ் அணியினர் மட்டுமில்லாமல், இ.பி.எஸ் அணியில் உள்ள தம்பித்துரை மற்றும் எம்.எல்.ஏ கீதா மணிவண்ணன் ஆதரவாளர்களும் கடும் விரக்தியில் உள்ளனர்.


 

 
இதனால் 4ம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் ஏதாவது கோஷ்டி பூசல் கூட ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஏற்கனவே அதாவது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை ஏதோ காரணம் காட்டி, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலோடு விலக்கியதோடு, அதே இடத்திற்கு தற்போதைய மாவட்ட செயலாளர் மற்றும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கரை கொண்டு வந்த முழு பொறுப்பு தம்பித்துரையே சாரும். 
 
அந்நிலையில், ஏன் தம்பித்துரை மற்றும் கீதா மணிவண்ணன் ஆகியோரின் பெயரை போட வில்லை என நடுநிலையாளர்கள் மட்டுமில்லாமல் அ.தி.மு.க வினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சி. ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!

கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments