ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக அதிமுகவின் நிலை என்ன?

Mahendran
புதன், 14 ஆகஸ்ட் 2024 (11:34 IST)
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன் அதிமுக இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் திமுக இதுவரை இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திமுக சார்பில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments