Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் திருப்பம்: வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு

Webdunia
ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (11:27 IST)
விவசாயிகளுக்கான உற்பத்தி வர்த்தக மற்றும் வணிக மசோதா, விலை உறுதிப்பாடு மற்றும் வேளாண் நுட்பங்கள் குறித்த மசோதா சமீபத்தில் மக்களவையில் அமல்படுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த மூன்று மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தாக்கல் செய்யப்பட்டது. மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் எம்பிக்களின் வாக்கெடுப்பில் நிறைவேறுமா என்பது சந்தேகமே என்று பாராளுமன்ற வட்டாரங்கள் கூறி வருகின்றன
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மாநிலங்களவையில் உள்ள அதிமுக எம்பிக்கள் வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு பதில் கார்ப்பரேட் அனுமதிக்கக் கூடாது என்றும் புதிய வேளாண் சட்டங்களால் விலை வாசி உயர்வை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றும் அதிமுக எம்பிக்கள் தெரிவித்தனர் 
 
மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேற மொத்தமுள்ள 243 எம்பிக்களில் 122 எம்பிகள் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக எம்பிக்கள் ஆதரவும் தற்போது இல்லாமல் இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments