சசிகலாவுக்கு அதிமுக எம்.பி ஆதரவா? வைரலாகும் எம்பியின் டுவீட்

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (19:08 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இதனை அடுத்து சசிகலாவுக்கு அதிமுக கட்சியிலேயே ஆதரவு பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் அதிமுக எம்பி விஜயகுமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் சசிகலா அதிமுக கொடி உள்ள காரில் வந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் 
 
இது குறித்து அவர் கேட்டபோது ’அம்மா அவர்கள் பயணம் செய்த காரை நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்ததால் அந்த காரை எனது டுவிட்டரில் பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது என்றும் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் அவர் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் வகையிலேயே இந்த படத்தை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாக அதிமுக வட்டாரங்களில் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்பி ஒருவரே சசிகலாவுக்கு ஆதரவு என்ற தகவல் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிஹாரில் மறு வாக்குப்பதிவு இல்லாத முதல் தேர்தல் .. ஆச்சர்யமான தகவல்

தங்கத்தின் விலையில் அதிரடி வீழ்ச்சி! - பவுனுக்கு இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு மட்டும் இத்தனை லடசம் ஓட்டுக்களா?

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments