தற்கொலை செய்யப் போறேன்னு சொல்லிட்டு தூங்கும் அதிமுக எம்பி: வைரலாகும் புகைப்படம்

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (16:23 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நேற்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  நவநீதகிருஷ்ணனின் இந்த மிரட்டலுக்கு கீ.வீரமணி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்தனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளம் ஒன்றில் நவநீதகிருஷ்ணன் எம்பி தூங்குவது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.,

யோவ் எந்திரிய்யா. தற்கொலை செய்யப் போறேன்னு சொல்லிட்டு தூங்கிக்கிட்டு இருக்க, தூங்குகிறவரை எழுப்பலாம் நடிக்கிறவரை எப்படி எழுப்புவது, அட சும்மா இருப்பா அப்புறம் எந்திரிச்சி காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்னு பாடி தொலைக்கப்போறார்' போன்ற பல கிண்டலான பதிவுகள் பதிவாகி வருகிறது. என்ன இருந்தாலும் அவர் ஒரு எம்பி, அயர்ந்து தூங்குபவரை கிண்டல் செய்ய கூடாது என்று பாசிட்டிவ்வாகவும் ஒருசிலர் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

கடற்கரையில் நடந்த கொண்டாட்டம்.. திடீரென நடந்த துப்பாக்கிச்சூடு, 10 பேர் பலி

யாருடன் கூட்டணி.. முக்கிய அப்டேட்டை அளித்த பிரேமலதா விஜயகாந்த்..!

அடுத்த கட்டுரையில்
Show comments