பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் அதிமுக எம்.பி?- காலியாகிறதா அதிமுக கூடாரம்?

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (16:07 IST)
திருப்பங்கள் மீது திருப்பங்களாக, திரைப்படத்தை விட விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் கட்சிகளின் கதை. ”அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என்ற கிராமத்து பழமொழியை போல சரியான தலைமை இல்லாத கட்சிக்கு ஆளுக்கு ஆள் மல்லுக்கு நிக்கிறார்கள்.

அவர்களை சுட்டிக்காட்டி பலர் சொந்த கட்சிகளும் தொடங்கிவிட்டார்கள். தற்போது அமமுக கட்சிக்குள் தங்க.தமிழ்செல்வனால் ஒரு பூகம்பம் வெடித்திருக்க, தொடர்ந்து அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா அவர்களும் தனது கருத்தின் மூலம் அடுத்த பூகம்பத்தை வெடிக்க செய்திருக்கிறார்.

சமீபத்தில் பேசிய சசிகலா புஷ்பா “மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் அவரது திட்டங்களை தமிழகத்தில் யாரும் சரியாக கொண்டுவரவில்லை. மோடி ஆட்சியே தமிழகத்துக்கு சரியான ஆட்சி” என்று சாடைமாடையாக பேசியிருக்கிறார்.

இதன் மூலம் சசிகலா புஷ்பா தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என மறைமுகமாக பேசுவதாக கூறப்படுகிறது. மேலும் சில அதிமுக அமைச்சர்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் யாரும் விமர்சனத்திற்குரிய எந்த பேட்டியும் தர வேண்டாம் என மேலிடத்தில் உத்தரவிட்டும் சசிகலா இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments