Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக எம்.எல்.ஏக்களை டெல்லிக்கு கொண்டு செல்லும் சசிகலா....

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2017 (13:47 IST)
அதிமுக எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
 
இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கலந்து கொண்டு எம்.எல்.ஏக்களிடம் பேசினார். 
 
ஆனால், அந்த கூட்டம் முடிந்த பின்பும், எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியே வரவில்லை. அவர்கள் அனைவரையும் 2 பேருந்துகள் மூலம், விமானம் நிலையம் கொண்டு செல்ல இருப்பதாகவும், அங்கிருந்து டெல்லிக்கு அவர்களை அழைத்து சென்று, சசிகலாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல், ஆளுநர் தாமதம் செய்து வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
தமிழக அரசியலில் அடுத்தடுத்து  நடக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments